தாலிபான்களிடம் ஒரு பெண் சிக்கினாலும் அவ்வளவுதான்... ஆப்கானிஸ்தான் கால்பந்து பயிற்சியாளர் கூறும் கதிகலங்க வைக்கும் தகவல்
பெண்கள் கால்பந்து அணியில் விளையாடிய ஒரு பெண் சிக்கினாலும் போதும், அவ்வளவுதான் அவரை சித்திரவதை செய்து மற்ற வீராங்கனைகள் எங்கிருக்கிறார்கள் என்பதை தாலிபான்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்கிறார் ஆப்கன் அணி பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளரான பெண் ஒருவர்.
ஆப்கன் கால்பந்து அணியின் கோல் கீப்பராக இருந்தவர் Wida Zemarai.
1996 முதல் 2001வரை ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் பிடியிலிருந்தபோது கால்பந்து உட்பட பல விளையாட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. உறவினரான ஆண் ஒருவரின் துணையின்றி வீட்டை விட்டு வெளியே வந்த பெண்கள் கொடூரமான பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
ஆனால், தாலிபான்களின் ஆட்சிக்குப் பிறகு, மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கத் தொடங்கினார்கள். மீண்டும் பெண்கள் கால்பந்து விளையாட்டு பிரபலமாகியது.
ஆனால், தற்போது தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ளதால், எந்த விளையாட்டுக்கள் பிரபலமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதோ, அவையே அந்த பெண் வீராங்கனைகளுக்கு பிரச்சினையாகி உள்ளது.
ஆம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளையாட்டுக்கள் மூலம் வீராங்கனைகளை தாலிபான்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்ற ஒரு அச்சம் உருவாகியுள்ளது.
ஆப்கன் கால்பந்து அணியின் கோல் கீப்பராக இருந்து பயிற்சியாளராக மாறிய Wida Zemarai கூறும்போது, தாலிபான்கள் புனிதப்போர் செய்வதாகவும், தங்களுக்கு பாலியல் அடிமைகளாக பெண்களை தேர்வு செய்வதாகவும் கூறியுள்ளார்கள் என்பதைக் கேட்பதற்கே பயங்கரமாக இருக்கிறது.
காரணம், தாலிபான்களிடம் ஒரு பெண் சிக்கிவிட்டால், அவளை பொம்மை மாதிரி வைத்திருக்கமாட்டார்கள், அவளை பாலியல் அடிமையாக்கி, அவள் சாகும்வரை கூட அந்த பெண்ணை சித்திரவதை செய்வார்கள் என்கிறார் Wida Zemarai.