புலம்பெயர் மக்களை இரக்கமின்றி பாலைவனத்திற்கு துரத்தும் ஒரு நாடு: ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்பட்ட சிக்கல்
சஹாராவின் தெற்கே அமைந்துள்ள நாடுகளை சேர்ந்த புலம்பெயர் மக்கள் துனிசிய நிர்வாகத்தால் பாலைவனப் பகுதிகளுக்கு வலுக்கட்டாயமாக துரத்தப்படுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
1 பில்லியன் யூரோ ஒப்பந்தம்
இதில் சிலர் துனிசியாவிற்குள் எல்லையை கடக்க முற்பட்டபோது தாகத்தால் இறந்துள்ளனர். சட்டவிரோத புலம்பெயர்தலை தடுக்கும் வகையில், வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் 1 பில்லியன் யூரோ ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
Photograph: Alessio Mamo
தற்போது துனிசியாவின் இந்த கொடூர நடவடிக்கைக்கு எதிராக பெல்ஜியம் உறுதியான நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வெளியான தரவுகளின் அடிப்படையில், துனிசிய அதிகாரிகள் ஜூலை மாதத்தில் மட்டும் 4,000 க்கும் மேற்பட்ட மக்களை லிபியா மற்றும் அல்ஜீரியாவின் எல்லையில் உள்ள இராணுவ பாதுகாப்பு மண்டலங்களுக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் ஜூலை முதல் வாரத்தில் மட்டும் சுமார் 1,200 பேர் லிபிய எல்லைக்குத் தள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தாகத்தால் 7 புலம்பெயர் மக்கள் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
Photograph: Alessio Mamo
ஆனால் உண்மையில் 50 முதல் 70 பேர்கள் வரையில் தாகத்தால் இறந்திருப்பதாக தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. துனிசியாவின் இந்த இரக்கமற்ற நடவடிக்கையை எதிர்த்து ஐரோப்பிய தலைவர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
தாகத்திற்கு தண்ணீர் இல்லை
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் ஒருபகுதியாகவே தாங்கள் செயல்படுவதாக துனிசியா விளக்கமளித்துள்ளது. 38 வயதான நைஜீரியர் ஒருவர் தெரிவிக்கையில்,
ஜூலையில் மட்டும் மூன்று முறை தாம் பாலைவனத்திற்கு துரத்தப்பட்டதாகவும், பாலைவனத்தில் தாகத்திற்கு தண்ணீர் இல்லை என்பதால், உயிர் வாழ என் சிறுநீரை நானே குடிக்க வேண்டியதாயிற்று என 38 வயதான அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
துனிசிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை சர்வதேச ஊடகங்கள் வெளிச்சமிட்டு காட்டினாலும், தங்கள் தரப்பில் தவறேதும் இல்லை என்றே அந்த நாடு விளக்கமளித்து வருகிறது.
@epa
கடந்த ஜூலை மாதம் துனிசியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே சிறப்பு ஒப்பந்தம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 1 பில்லியன் யூரோ பெறுமதியான இந்த ஒப்பந்தம் ஊடாக துனிசியா மனித கடத்தல்காரர்களை தடுக்கவும்,
எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், தத்தளிக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த தொகை பயன்படுத்தப்பட உள்ளது. எதிர்வரும் நாட்களில் முதல் தவணையான 127 மில்லியன் யூரோ துனிசியாவுக்கு அளிக்கப்பட உள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |