25 ஆண்டுகள் ஆகியும் அரசுப்பணி வழங்கவில்லை.., பாதிக்கப்பட்டவர்கள் எடுத்த ஒற்றை முடிவு
ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி முடித்து 25 ஆண்டுகளாகியும் அரசுப்பணி வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.
நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
அப்போது, பல்வேறு கோரிக்கைகள், நலத்திட்ட உதவிகள், பட்டா போன்றவை குறித்து 688 மனுக்கள் அளிக்கப்பட்டன.
அரசுப்பணி வழங்கவில்லை
இந்நிலையில், தங்களுக்கு 25 ஆண்டுகளாக அரசுப் பணி வழங்காததால் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி முடித்த மாணவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வழங்கிய மனுவில், "தமிழகத்தில் ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி முடித்த நிலையில் 17,000 பேர் பணிகளுக்காக காத்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கு இதுவரையிலும் இந்திய அரசு பணியை வழங்கவில்லை.
சுமார் 25 ஆண்டுகளாக அரசுப்பணியை வழங்காமல் புறக்கணித்து வருகிறார். இதனால், வரும் மக்களவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
மேலும், தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை போன்றவற்றை திரும்ப கொடுக்க முடிவு எடுத்துள்ளோம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |