நேற்று காபூல் விமான நிலையத்தில் பயங்கர தாக்குதல் உலுக்கிய பிறகு... இன்றைய நிலை? நிம்மதியை குலைக்கும் காட்சி
காபூல் விமான நிலையத்தில் நேற்று இரண்டு பயங்கர தற்கொலை தாக்குல் நடத்தப்பட்ட பிறகு இன்று ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்துள்ளதாக வீடியே ஒன்று வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதியோடு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு படைகள் வெளியேற வேண்டும் என தலிபான்கள் எச்சரித்துள்ள நிலையில், மக்களை வெளியேற்றும் பணிகளில் அமெரிக்க, பிரித்தானியா உட்பட வெளிநாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, காபூல் விமான நிலையத்தில் கூடியிருப்பவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ‘மிகவும் நம்பகமான’ உளவுத்துறை தகவல் கிடைதத்துள்ளது என்று நேற்று பிரித்தானியா ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹெப்பி எச்சரிக்கை விடுத்தார்.
ஜேம்ஸ் ஹெப்பி எச்சரித்த சில மணிநேரங்களில்காபூல் விமான நிலையத்தில் பயங்கர தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 95 பேர் கொல்லப்பட்டதாகவும், கிட்டதட்ட 150 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ் கிளை அமைப்பான ஐ.எஸ்.(கே) இந்த கொடூர தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
அதேசமயம், காபூல் விமான நிலையத்தில் இன்னும் பல தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்க தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று பயங்கர தற்கொலை தாக்குதல்கள் உலுக்கிய நிலையில், இன்று நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்துள்ள வீடியோவை TOLO NEWS நிருபர் Abdulhaq Omeri வெளியிட்டுள்ளார்.
ஆனால், குறித்த வீடியோ இன்று தான் எடுக்கப்பட்டதா என்ற உண்மை தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.
Video : Right now the situation at the #KabulAiport.
— Abdulhaq Omeri (@AbdulhaqOmeri) August 27, 2021
After two deadly explosion yesterday. #Kabul #Afghanistan pic.twitter.com/tc6bJekAkQ