RCBயை தொடர்ந்து விற்பனைக்கு வரும் மற்றொரு ஐபிஎல் அணி - வாங்க போவது யார்?
2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெற உள்ள நிலையில், ஐபிஎல் அணிகள் தக்கவைத்துள்ள மற்றும் விடுத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னர் 2 ஐபிஎல் அணிகள் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விற்பனைக்கு வந்த RCB
முன்னதாக நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது.

சமீபத்தில், அதன் உரிமையாளரான டியாஜியோ நிறுவனம் விற்பனை செயல்முறையை தொடங்கியதாக உறுதிப்படுத்தியது.
கோப்பை வென்ற பின்னர் RCB அணியின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதால் அதனை பணமாக்கும் திட்டத்தில் விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
RCB அணியை வாங்க ஆதார் பூனாவாலா, நிகில் காமத், ஹோம்பாலே பிலிம்ஸ், அதானி குழுமம் ஆகியோர் வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விற்பனைக்கு வரும் RR?
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவின் சகோதரர் ஹர்ஷ் கோயங்கா இந்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
I hear, not one, but two IPL teams are now up for sale- RCB and RR. It seems clear that people want to cash in the rich valuations today. So two teams for sale and 4/5 possible buyers! Who will be the successful buyers- will it be from Pune, Ahmedabad, Mumbai, Bengaluru or USA?
— Harsh Goenka (@hvgoenka) November 27, 2025
இதில், "RCB மற்றும் RR அணிகள் விற்பனைக்கு வருவதாக அறிந்துள்ளேன். இன்றைய அதிகபட்ச மதிப்பை பணமாக்க விரும்புகிறார்கள் என தெளிவாகியுள்ளது. இந்த அணிகளை, புனே, அகமதாபாத், பெங்களூரு, மும்பை, அமெரிக்காவை சேர்ந்த 4 முதல் 5 நபர்கள் வாங்கலாம்" என தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 65 சதவீத பங்குகளை மனோஜ் படேலின் ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமம் வைத்துள்ளது. ரெட்பேர்ட் கேபிடல் பார்ட்னர்ஸ் 15 சதவீத பங்குகளையும், லாச்லன் முர்டோக் சிறிய அளவிலான பங்குகளை வைத்துள்ளது.
2008 ஆம் ஆண்டு நடைபெற முதல் ஐபிஎல் தொடரில் மட்டும் கோப்பை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 2025 ஐபிஎல் தொடரில், 9வது இடம் பிடித்தது.

தற்போது அணித்தலைவராக இருந்த சஞ்சு சாம்சன் டிரேடிங் மூலம் CSK அணிக்கு வழங்கிவிட்டு, ரவீந்திர ஜடேஜா, சாம் கரண் ஆகிய 2 வீரர்களை பெற்றுள்ளது.
மேலும், ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதன் சொந்த மைதானத்தை ஜெய்ப்பூரில் இருந்து புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்திற்கு(MCA Stadium) மாற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |