தந்தையை தொடர்ந்து வருங்கால கணவரும் மருத்துவமனையில் அனுமதி - சோகத்தில் ஸ்ம்ரிதி மந்தனா
ஸ்ம்ரிதியின் தந்தைக்கு மாரடைப்பால் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வருங்கால கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ம்ரிதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனையாக வலம் வருபவர் ஸ்ம்ரிதி மந்தனா.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம், அதிவேக சதமடித்த இந்திய வீராங்கனை என பல்வேறு சாதனைகளை ஸ்ம்ரிதி மந்தனா படைத்துள்ளார்.
சமீபத்தில், 2025 ஐசிசி உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.
இவரும், பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

இதனையடுத்து, நேற்று இருவருக்கும் ஸ்மிருதியின் சொந்த ஊரான சாங்லியில் திருமணம் நடைபெறவிருந்தது.

ஆனால், திடீரென ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், திருமணம் திகதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.

அவரது தந்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வருங்கால கணவரும் மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், ஸ்மிருதியின் வருங்கால கணவரான பலாஷ் முச்சலும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பேசிய பலாஷ் முச்சலின் தாயார் அமிதா முச்சல், "ஸ்ம்ரிதியின் தந்தையும் பலாஷும், ஸ்ம்ரிதியை விட மிக நெருக்கமாக இருந்தார்கள். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரிய வந்த போது, அவர் குணமாகும் வரை திருமணத்தை ஒத்திவைக்கலாம் என இருவரும் முடிவெடுத்தனர்.
பலாஷ் ரொம்ப அழுததால், திடீரென உடல்நிலை மோசமடைய தொடங்கியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு, ECG பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மும்பை வந்து விட்டார். இருந்தாலும் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |