இலங்கையைத் தொடர்ந்து இனி சிங்கப்பூருக்கும் சொகுசு கப்பலில் செல்லலாம்: வெளியானது அறிவிப்பு
அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சொகுசு கப்பல்கள் இயக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம்
சென்னையில் இருந்து, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சொகுசு கப்பல்களை இயக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னை துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் லிட்டோரல் குரூஸ் லிமிடெட் நிறுவனம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற வகையிலான கட்டணம், நல்ல நட்புடன் உபசரிப்பு, தமிழகத்தில் இருக்கும் அதிக பராம்பரியமான இடங்கள் ஆகியவற்றால் சென்னை துறைமுகம் சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளது.
இந்நிலையில், பயணிகளின் சேவையை மேம்படுத்தும் நோக்கத்தில் லிட்டோரல் குரூசெஸ் லிமிடெட் நிறுவனத்துடன், சென்னை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் சுனில் பாலிவால் நேற்று புரிந்துணவர்வு ஒப்பந்தம் செய்தார்.
சொகுசு கப்பல்கள்
அந்தவகையில், சென்னையில் இருந்து திரிகோணமலை, கொழும்பு, மாலத்தீவு, விசாகப்பட்டினம், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு 1,200 பயணிகள் வரை செல்லும் சொகுசு கப்பலை இயக்கப்பட உள்ளன.
அதுமட்டுமல்லாமல், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து 22 முதல் 30 பயணிகள் வரை செல்லும் சொகுசு படகுகளின் இயக்கமும் துவங்க உள்ளது. இதனால் அதிக சுற்றுலா பயணிகள் வரும் துறைமுகமாக சென்னை துறைமுகம் மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |