“நீண்ட ஆயுள் மாத்திரை” மனித ஆயுளை நீட்டிக்க உதவும்! பிரையன் ஜான்சன் தகவல்
இளமையான தோற்றத்திற்காக அறியப்படும் மில்லியனர் பிரையன் ஜான்சன் “நீண்ட ஆயுள் மாத்திரை” குறித்த சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரையன் ஜான்சனின் புதிய தகவல்
இளமையான தோற்றத்திற்காகவும், நீண்ட ஆயுளை பெறுவதற்கான வழியை ஆராய்ந்து வருவதற்காகவும் அறியப்படும் மில்லியனர் தொழிலதிபரான பிரையன் ஜான்சன்(Millionaire Bryan Johnson) அவ்வப்போது தனது வாழ்க்கை முறை குறித்தும், இளமையாக வாழ்வதற்கான ரகசியங்கள் குறித்தும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களை பகீர்வார்.
அவ்வாறு சமீபத்தில் அவர் “நீண்ட ஆயுள் மாத்திரை” (“longevity pill”) குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
Longevity pill saved the life of an old (80-90 yr human equivalent), ill German Shepherd. Human trials next.
— Bryan Johnson /dd (@bryan_johnson) August 18, 2024
The pill stabilizes telomeres, the caps holding tips of our DNA from getting loose.
pic.twitter.com/2ddKt5F5T3
அதில், இந்த “நீண்ட ஆயுள் மாத்திரை” நோய்வாய்ப்பட்ட வயதான ஜெர்மன் ஷெப்பர்ட்(German Shepherd) நாயின் ஆயுளை அதிகரிக்க உதவி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது மாத்திரை தொடர்பான அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளில் மனித மாதிரிகளும் உட்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்துளார்.
எவ்வாறு வேலை செய்கிறது?
இந்த நீண்ட ஆயுள் மாத்திரைகள் டெலோமியர்களை(telomeres) உறுதிப்படுத்துகிறது, மேலும் நமது டிஎன்ஏ-வின் முனைகளை தளரவிடாமல் பாதுகாக்கும் தொப்புகளாக செயல்படும் என்றும் அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.
காசா பள்ளிகளில் தஞ்சம் புகுந்த பாலஸ்தீனியர்கள்: குண்டு வீசி தாக்கிய இஸ்ரேல்: அதிகரிக்கும் உயிரிழப்பு
அவர் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது 3.5 லட்சம் பார்வையாளர்களை கடந்து இருப்பதுடன், 3,200 பேர் லைக் செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |