பதட்டமான சூழலில் தலிபான் எதிர்ப்பு படை தலைவவர் அகமத் மசூத் வெளியிட்ட பரபரப்பு ஆடியோ
ஆப்கானிஸ்தானில் பெரும்பகுதியை கைப்பற்றிய தலிபான்கள் எஞ்சியிருந்த பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கையும் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ள நிலையில் எதிர்ப்பு படை தலைவர் அகமத் மசூத் பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திங்கட்கிழமை பஞ்ச்ஷீர் மொத்தமும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்ததாக தலிபான்கள் அறிவித்தனர்.
இதனிடையே திர்ப்பு படை தலைவவர் அகமத் மசூத் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் 19 நிமிடங்கள் பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தலிபான்களுக்கு எதிராக தேசிய எழுச்சிக்கு அழைப்பு விடுத்தார்.
தலிபான்கள் மதப் மதகுருமார்களின் வேண்டுகோளை புறக்கணித்து, தனது படைகளைத் தாக்கினர் என்றும், ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தலிபான்களை சட்டப்பூர்வமாக்கியதற்காகவும், அவர்களுக்கு இராணுவ மற்றும் அரசியல் நம்பிக்கையை அளிப்பதற்காகவும் அவர் சர்வதேச சமூகத்தை சாடினார்.
பஞ்ச்ஷிரில் எதிர்ப்புப் படைகள் இன்னும் உள்ளன, மேலும் தலிபான்களுக்கு எதிராக தொடர்ந்து போராடும் அகமத் மசூத் தெரிவித்துள்ளார்.
32 வயதான அகமத் மசூத், மறைந்த முன்னாள் ஆப்கானிஸ்தான் கெரில்லா படை தளபதி அகமத் ஷா மசூத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.