நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் AI - எப்படி செயல்படும்?

Colombia Election Artificial Intelligence
By Karthikraja Feb 25, 2026 05:55 AM GMT
Report

கொலம்பியா நாடாளுமன்ற தேர்தலில் AI போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் AI

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மார்ச் 8 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் AI போட்டியிட உள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் AI - எப்படி செயல்படும்? | Ai Avatar Gaitana To Contest In Colombia Election

கொலம்பியாவின் கரீபியன் கடற்கரையில் உள்ள ஜெனு சமூகத்தைச் சேர்ந்த கார்லோஸ் ரெடோண்டோ என்பவர் இந்த AI அவதாரை உருவாக்கி, Gaitana (கைடானா) என பெயரிட்டுள்ளார். 

கைடானா என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்த பழங்குடி மக்களின் தலைவி ஆவார்.

இந்த கைடானா ரோபோவின் குரல் மற்றும் நீல நிற தோலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க போர் கப்பலில் கழிப்பறை பிரச்சினை- ஈரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிக்கல்

அமெரிக்க போர் கப்பலில் கழிப்பறை பிரச்சினை- ஈரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிக்கல்

இந்த கைடானாவிற்கு வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள், வாக்குச்சீட்டில் "IA" என்ற பெயரை தேட வேண்டும். இது "Inteligencia Artificial" என்பதன் ஸ்பானிஷ் சுருக்கம் ஆகும். 

கொலம்பிய சட்டம் மனிதரல்லாத வேட்பாளரை முறையாகப் பதிவு செய்ய அனுமதிக்காததால், கைடானா வெற்றி பெற்றால், கைதானாவின் உத்தரவுகளின்படி செயல்படும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தேர்தல் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

கைடானா எப்படி செயல்படும்?

உதாரணமாக, 200 பக்க மசோதா அறிமுகப்படுத்தப்பட்டால், கைடனா அதை முக்கிய தரவுகளைச் சுருக்கமாக மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் Info Graphics வடிவத்திற்கு மாற்றி, 10,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட தனது சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளும். 

பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களை, "ஆம்" மற்றும் "இல்லை" என்ற நிலைப்பாடுகளாக வடிகட்டி கைடனா  அவற்றை எண்ணுவார். எந்தப் பக்கம் 50 சதவீதத்திற்கும்அதிகமான ஆதரவை பெறுகிறதோ அதுவே நாடாளுமன்றத்தில் அது எவ்வாறு வாக்களிக்கிறார் என்பதைத் தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.

தரவு பாதுகாப்பு மற்றும் மாறுபட்ட கருத்துகளின் ஒருங்கிணைப்பு போன்ற பகுதிகளில் இந்த கைடானாவை இன்னும் மேம்படுத்த வேண்டியது உள்ளதாக அதை உருவாக்கிய ரெடோண்டோ ஒப்புக்கொள்கிறார்.

இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தாலும், ஜனநாயக நடைமுறையில் AIயின் நேரடி பங்களிப்பு அவசியமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US