AI மூலம் உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்கப்படலாம்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு தவறானவர்களின் கையில் சிக்கக்கூடும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
AI குறித்து பில்கேட்ஸ் எச்சரிக்கை
செயற்கை தொழில்நுட்பம்(AI) மனித சமூகத்தில் மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்த கூடிய உயிரியல் ஆயுதங்களை உருவாக்கும் தவறான கைகளில் கிடைக்க கூடும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Optimism with Footnotes என்ற தன்னுடைய வருடாந்திர கடிதத்தில் AI குறித்த இந்த எச்சரிக்கையை பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகம் மிகப்பெரிய பெருந்தொற்றை சமாளிக்க தயாராக இல்லை என்று பில்கேட்ஸ் 2015ம் ஆண்டு தெரிவித்து இருந்த நிலையில், 2019ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று ஒட்டு மொத்த உலகத்தையும் உலுக்கியது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட் ஆய்வு முடிவுகள்
மைக்ரோசாப்ட் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் AI எவ்வாறு உயிரியல் பாதுகாப்பு வளையங்களை உடைக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.
ஆராய்ச்சியில் ரிசின் போன்ற ஆபத்தான 72 நச்சுப் புரதங்களை தேர்ந்தெடுத்த ஆராய்ச்சியாளர்கள் அதை AI கருவிகள் மூலம் 70,000 நச்சு DNA வரிசைமுறைகளாக மாற்றியுள்ளனர்.
இந்த ஆராய்ச்சியில் AI கருவி மென்பொருள் 77% ஆபத்தான தரவுகளை கண்டறிய தவறியது குறிப்பிடத்தக்கது.
இதனால் தங்கள் AI நிறுவனங்கள் பாதுகாப்பு தரங்களை அதிகரிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |