பைனாகுலரால் மதுரை அதிமுக வேட்பாளருக்கு நேர்ந்த சம்பவம்.., என்ன தான் நடந்தது?
மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் பிரச்சாரத்திற்கு பைனாகுலரோடு வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
மதுரை மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.பி. சு.வெங்கடேசன், அதிமுக சார்பில் டாக்டர் சரவணன், பாஜக சார்பில் ராம சீனிவாசன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சத்தியதேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பைனாகுலர் விவகாரம்
இந்நிலையில், மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன் பைனாகுலருடன் தேர்தல் பிரச்சார மேடைக்கு வந்தார். அவர் அப்போது, பைனாகுலரை வைத்து, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செய்த திட்டங்களை பார்ப்பதாக கூறி கிண்டல் செய்யும் விதமாக பேசினார்.
அவர் பேசுகையில், "மதுரை எம்பி சு.வெங்கடேசன் என்பவரை சு.வெ என்பார்கள். அவர் சும்மா இருக்க போகிறார் என்பதற்காக அந்த பெயரை வைத்தார்களா என்று தெரியவில்லை. அவர் ஓன்லைனில் மட்டும் தான் இருப்பார். மக்களை சந்தித்ததே கிடையாது.
இங்கு அவர் செய்த திட்டங்கள், பணிகள் கண்ணில் தென்படுகிறதா என்று பார்க்க பைனாகுலர் கொண்டு வந்தேன். ஏதாவது அவர் செய்த திட்டங்கள் தென்படுகிறதா என பார்க்கிறேன். தெரியவில்லை" என்று பேசினார்.
இதில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தான் பார்த்துக் கொண்டிருந்த பைனாகுலரின் லென்ஸ் மூடியை கழற்றவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் மற்றும் நெட்டிசன்கள் அவரை விமர்சித்து கிண்டல் செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |