மாதம் ரூ.3000 மகளிர் உரிமைத் தொகை.., அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
மக்களவை தேர்தலுக்குக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 32 தொகுதிகளில் அதிமுக களமிறங்குகிறது. இந்நிலையில், திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடியாக 18 தொகுதிகளில் மோதிக் கொள்கின்றனர்.
ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.
முக்கிய அம்சங்கள்
1. ஆளுநர் பதவி தொடர்பாக மாநில அரசிடம் மத்திய அரசு கருத்து கேட்க வேண்டும்.
2. சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
3. முற்றிலுமாக சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
4. பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.3000 வழங்கப்படும்.
5. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்த வலியுறுத்துவோம்.
6. குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்துவோம்.
7. நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்
8. நீட் தேர்வு மதிப்பெண்களுக்கு மாற்றாக பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து மாணவர் சேர்க்கை.
9. இருச்சக்கர வாகனங்களுக்கு தனிப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
10. 100 நாட்கள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
11. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்.
12. தடையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
13.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
14. தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
15. புதிய நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கப்படும்.