அதிமுக அலுவலகத்தை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி! பரபரப்பான சூழலில் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு இடையே பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவது யார் என்ற போட்டி நிலவியது.
இந்த விவகாரத்தில் தொண்டர்கள் அடிதடியில் ஈடுபட்டதால், வருவாய்த்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் அலுவலகத்தை கைப்பற்ற தனித்தனியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர்.
இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
tamil.news18
இந்த வழக்கு தொடர்பில் சென்னை உயர்நீதி மன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல்-ஐ அகற்றி, அலுவலகத்தின் சாவியை பழனிசாமியிடம் வழங்க வேண்டும் என்றும், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதை தடுக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
(File | PTI)
மேலும், தலைமை அலுவலகத்திற்கு தேவையான பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.