Air Canada 6-வது முறையாக உலகின் சிறந்த விமான நிறுவனமாக தெரிவு
Air Canada 6-வது முறையாக உலகின் சிறந்த விமான நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற APEX 2026 விருது வழங்கும் விழாவில் கனடாவின் முன்னணி விமான நிறுவனமான Air Canada, உலகின் சிறந்த விமான நிறுவனமாக Five-Star Global Airline விருதை 6-வது முறையாக வென்றுள்ளது.
பயணிகள் தரமதிப்பீடுகளின் அடிப்படையில் வழங்கப்படும் இந்த விருது Air Canada நிறுவனத்தின் பயணிகள் திருப்தி, பாதுகாப்பு மற்றும் சேவைத்திறன் ஆகியவற்றில் நிலைத்த சிறப்பை பிரதிபலிக்கிறது.
Air Canada தனது பயன் சேவையை முன்பதிவு முதல் தரையிறங்கும் வரை மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளது.
பயணிகள் வசதிக்காக விரிவான அம்சங்கள், பரந்த இருக்கைகள், தரமான உணவுகள் மற்றும் சிறந்த in-flight entertainment வசதிகள் வழங்கப்படுகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் Air Canada முக்கிய பங்கு வகிக்கிறது. எரிபொருள் திறனுள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கார்பன் வெளியீட்டை குறைக்கும் முயற்சிகள், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
பாதுகாப்பு மற்றும் புதுமை ஆகியவற்றிலும் Air Canada முன்னிலை வகிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Air Canada win Five-Star Global Airline Award, Air Canada win APEX 2026 Awards, Air Canada airlines, Global Airline Award sixth time