மருத்துவமனையில் நேர்ந்த விபரீதம்! ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த ஊழியர்
சென்னையில் அரசு மருத்துவமனை ஊழியர் ஏசி தலையில் விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஒப்பந்த ஊழியர்
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (62). இவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்ட பிரிவில் ஒப்பந்த வேலை பார்த்து வந்தார்.
இன்று மதியம் திருநாவுக்கரசு பணி முடிந்து வீட்டிற்கு கிளம்பியபோது, எதிர்பாராத விதமாக மூன்றாவது மாடியில் இருந்து ஏசி கழன்று அவரது தலையில் விழுந்தது.
பரிதாப பலி
இதில் பலத்த அடிபட்டதால் திருநாவுக்கரசு ரத்த வெள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதனைத் தொடர்ந்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், திருநாவுக்கரசு உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.