குறைந்த கட்டணத்தில் பறக்க ஏர் இந்தியா புதிய திட்டம்
ஏர் இந்தியா, பயணிகளுக்கான புதிய 'Basic' கட்டண வகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பயணிகள் விமானத்தில் உணவு வழங்கப்படாமல் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும்.
இந்த புதிய திட்டம், ஏர் இந்தியாவின் Economy-ல் நான்காவது கட்டண வகையாக சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன் Value, Classic, Flex என்ற மூன்று வகைகள் இருந்தன.

ஏர் இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த திட்டம் முதலில் டெல்லி-உதய்பூர், டெல்லி-சண்டிகர் போன்ற குறுகிய தூர உள்நாட்டு விமானங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
Basic கட்டணத்தில், பயணிகள் 15 கிலோ சுமை (checked baggage), 7 கிலோ கைப்பை (cabin baggage), இலவச தேநீர்/காபி ஆகிய வசதிகளை பெறுவார்கள்.
உணவு விரும்பும் பயணிகள், புறப்படும் நேரத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஓன்லைனில் உணவை முன்பதிவு செய்யலாம். இதில் சைவம், அசைவம், ஜெயின், நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு போன்ற விருப்பங்கள் வழங்கப்படும்.
ஏர் இந்தியா தெரிவித்ததாவது: “இது செலவு குறைக்கும் முயற்சி அல்ல, பயணிகளுக்கு அதிக சுதந்திரம் அளிக்கும் திட்டம். பயணிகள் தங்களுக்கு தேவையானதைத் தேர்வு செய்யலாம்” என கூறியுள்ளது.
இந்த மாற்றம் எகனாமி கிளாஸ் பயணிகளுக்கே பொருந்தும். பிரீமியம் எகனாமி மற்றும் பிஸினஸ் கிளாஸ் பயணிகளுக்கு எந்த மாற்றமும் இல்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |