நடுவானில் திடீரென்று மாயமான பயணிகள் விமானத்தால் பரபரப்பு
ரஷ்யாவில் 28 பயணிகளுடன் கம்சட்கா தீபகற்பத்தின் மீது பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென்று மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்டுப்பாட்டு அறைகளுடனான தொடர்பறுந்த நிலையில் விமானத்தை கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாயமாகியுள்ள விமானத்தில் ஒரு குழந்தை உட்பட 22 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் பயணப்பட்டுள்ளனர்.
விமானம் காணாமல் போனதில் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதா அல்லது மோசமான வானிலை காரணமா என்பது தொடர்பில் ரஷ்ய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் உள்ள பழனா என்ற நகரத்திற்கு அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் மற்றும் ஒரு விமானம் என தேடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
300,000 மக்கள் குடியிருக்கும் கம்சட்கா பகுதியானது உக்ரைன் அல்லது பிரான்ஸை விட பெரியது,
16 எரிமலைகள் கொண்ட இந்த தீபகற்பத்தின் ஒருபுறம் பசிபிக் பெருங்கடலால் சூழப்பட்டுள்ளது, மறுபுறம் ஓக்டோஸ்க் கடல் அமைந்துள்ளது.