கடவுச்சீட்டு, டிக்கெட் மட்டுமின்றி இனி இதுவும் கட்டாயம்: பிரபல விமான சேவை நிறுவனம் அறிவிப்பு
விமான பயணம் மேற்கொள்பவர்களுக்கு பொதுவாக கடவுச்சீட்டு, டிக்கெட் உள்ளிட்டவை மட்டுமே போதுமானதாக இருக்க, தற்போது கொரிய விமான சேவை நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
எடையை பதிவு செய்ய வேண்டும்
தென் கொரியாவின் முதன்மை விமான சேவை நிறுவனமான கொரிய ஏர் வெளியிட்டுள்ள புதிய விதிமுறையில், விமான பயணத்திற்கு முன்னர் பயணிகள் தங்கள் எடையை பதிவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.
கண்டிப்பாக இது உங்களை கேலி செய்யும் நோக்கில் அல்ல என்றும் விளக்கமளித்துள்ளது. இந்த நடைமுறையால் ஆகஸ்டு 28 முதல் செப்டம்பர் 3 வரையில் ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சில பயணிகளையும் செப்டம்பர் 8 முதல் 19 வரையில் Incheon சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சில பயணிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
முன்கூட்டியே தெரியப்படுத்தலாம்
சேகரிக்கப்படும் தரவுகள் அனைத்தும் நாட்டின் நிலம், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றே கொரிய ஏர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த திட்டத்தில் கலந்துகொள்ள விரும்பாத பயணிகள், விமான ஊழியர்களிடம் முன்கூட்டியே தெரியப்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
உடல் எடை அதிகமாக உள்ள பயணிகள் அதிக கட்டணம் செலுத்த நேரிடும் என்ற அச்சம் தேவையில்லை எனவும், இந்த தரவுகள் ஒரு ஆய்வுக்காக முன்னெடுக்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கபப்ட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |