தைவானில் சூறாவளியின் போது தரையிறங்க முயன்று தடுமாறிய விமானம்! வைரல் வீடியோ
தைவானில் சூறாவளிக்கு மத்தியில் தரையிறங்க முயன்ற விமானம் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்த நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
தைவானில் சூறாவளி
காங் ரே சூறாவளி(kong Rey) தாக்கியதில் தைவான் மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளது. பல சேதங்களை ஏற்படுத்திய இந்த காங் ரே சூறாவளி தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் கரையை கடந்துள்ளது.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு தைவானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளியாக காங் ரே சூறாவளி பார்க்கப்படுகிறது.
Passenger airplanes struggled to take off and land at the Taoyuan International Airport in Taiwan on Oct 31, battling strong winds brought about by Typhoon Kong-rey. pic.twitter.com/q0h9nrEpHZ
— The Star (@staronline) November 1, 2024
தடுமாறிய விமானம்
தைவானை சூறாவளி தாக்கிய போது, தவ்யென் (Taoyuan) தரையிறங்க முயற்சித்த விமானம் ஒன்று மிகுந்த தடுமாற்றத்தை சந்தித்து மீண்டும் வானத்தை நோக்கி பறந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், விமானம் தரையிறங்க முயன்ற போது பயங்கரமான காற்று வீசுவதையும் விமானம் தரையிறங்கிய முயற்சி செய்து மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்ததால் மீண்டும் வானத்தை நோக்கி பறந்து செல்வதை பார்க்க முடிகிறது.
ஆனால் இதன் பின் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |