ரஞ்சி தொடரில் 159 ஓட்டங்கள் விளாசிய ரஹானே: 416 ஓட்டங்கள் குவித்த மும்பை
ரஞ்சி கிண்ணத் தொடரில் மும்பை அணி வீரர் அஜிங்கியா ரஹானே 159 ஓட்டங்கள் விளாசினார்.
ரஹானே
மும்பை மற்றும் சட்டீஸ்கர் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி தொடர் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 
முதல் இன்னிங்சை ஆடிய மும்பை அணி 416 ஓட்டங்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய அஜிங்கியா ரஹானே (Ajinkya Rahane) 303 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் 159 ஓட்டங்கள் விளாசினார்.
சித்தேஷ் லாத் 13 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்களும், ஆகாஷ் ஆனந்த் 61 ஓட்டங்களும், ஷாம்ஸ் முலானி 39 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஆதித்யா சர்வாதே 5 விக்கெட்டுகளும், ரவி கிரண் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அஜய் மாண்டல் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ரஹானே, லாத் கூட்டணி நான்காவது விக்கெட்டுக்கு 304 பந்துகளில் 165 ஓட்டங்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |