பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்த பகுதி: எச்சரிக்கும் அதிகாரிகள்
பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியில் கடந்த மாதத்தில் மட்டும் கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பத்துமடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியிலுள்ள Occitanie என்ற பகுதியில், கடந்த மாதத்தில் மட்டும் புதிதாக கொரோனா நோயால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஜூன் மாத இறுதியை ஒப்பிடும்போது, பத்து மடங்கு அதிகரித்துள்ளது.
ஆகவே, அப்பகுதி சுகாதாரத்துறை அதிகாரிகள், அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இதுவரை தடுப்பூசி பெற்றுகொள்ளாதவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறும், கவனமாக இருக்குமாறும் அவர்கள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
Occitanieஇல் தற்போது 157 கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
Covid-19 : en France, une triple fracture vaccinale.
— Le Monde en cartes (@LM_enCartes) July 25, 2021
Retrouvez en ligne nos cartes, réalisées à partir des le géographe de la santé Emmanuel Vigneron, et l'analyse de @C_Strombonihttps://t.co/KT5ARdhHQ5 via @lemondefr pic.twitter.com/i4ua5sJKOY
#covid19 | ?Agissons dès maintenant !
— Cpam Herault actu (@cpam34) August 2, 2021
La situation sanitaire se dégrade très rapidement dans l'#Hérault. Notre département a le plus fort taux d’incidence de la région #Occitanie. Le #vaccin est efficace contre ce variant, vaccinons-nous ✊?
? https://t.co/Je7uUgHXuQ pic.twitter.com/XdlNPjlW2c