ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் உயிரை காப்பாற்றிய மருத்துவர் திடீர் மரணம்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் அளிக்கப்பட்டு குற்றுயிராக கிடந்த நிலையில் அவரது உயிரை காப்பாற்றிய பிரபல மருத்துவர் திடீரென்று மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் Omsk நகரத்து முக்கிய மருத்துவமனையில் பிரதான மருத்துவர்களில் ஒருவரான Sergei Maximischin என்பவரே தற்போது திடீரென்று மரணமடைந்துள்ளார்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் Omsk நகரத்து மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டபோது, அவரது உயிரை காத்தவர் மருத்துவர் Sergei Maximischin.
இந்த நிலையில் வியாழக்கிழமை 55 வயதான மருத்துவர் Sergei Maximischin திடீரென்று மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறித்த தகவலை நவால்னியின் தரப்பு முக்கிய நிர்வாகியும் உறுதி செய்துள்ளார். நவால்னியின் நிலை குறித்து முழுமையாக அறிந்தவர் மருத்துவர் Maximischin, அவர் திடீரென்று மரணமடைவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் நவால்னி தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ரஷ்ய சுகாதார அமைப்பு மிகவும் மோசமாக உள்ளது, Maximischin வயது மருத்துவர்கள் திடீரென இறப்பது ஒன்றும் வழக்கத்திற்கு மாறானது அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.
Maximischin மரணம் தொடர்பில் விரிவான விசாரணை தேவை என கோரப்பட்டுள்ளதாகவும் நவால்னி தரப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் மருத்துவர் Maximischin மரணத்தில் மூன்றாவது நபர் தலையிட்டதாக ஆதாரம் இல்லை என்றே கூறப்படுகிறது.