அல்ஜீரியாவில் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: பறிப்போன 25 பேர் உயிர்
அல்ஜீரியாவில் பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அல்ஜீரியாவில் பேருந்து விபத்து
வெள்ளிக்கிழமை அல்ஜீரியாவில் பயணிகள் பேருந்து ஒன்று தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 25 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 44 பேர் இந்த கோர பேருந்து விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்து செடிஃப் நகரில் இருந்து நாட்டின் தலைநகரான அல்ஜியர்ஸை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

25 பேர் வரை உயிரிழந்ததை தொடர்ந்து அல்ஜீரிய ஜனாதிபதி அப்துல்மஜித் டெபூன் நாடு முழுவதும் 3 நாள் தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |