ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

Refugee Spain Morocco
By Thiru Jul 31, 2026 05:47 PM GMT
Report

மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயின் எல்லைப்புற நகரான சியூட்டாவிற்குள் நுழைந்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டினர்

வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய ஸ்பெயின் ஆதிக்கப் பகுதியான சியூட்டாவின்(Ceuta) எல்லைப் பகுதிக்குள் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆயிரக்கணக்கானோரின் அத்துமீறிய நுழைவை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு முற்றிலும் சிதைப்பட்டு இருப்பதாகவும், உடனே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு எல்லை பாதுகாப்பிற்கு இராணுவத்தை அனுப்ப வேண்டும் எனவும் உள்ளூர் அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு | Ceuta Crisis 37500 Refugees Return To Morocco

ஸ்பெயின் உள்துறை அமைச்சகத்தின் தகவல் படி, சியூட்டாவிற்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை உச்சபட்சமாக 50,000ஐ கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் (பெரும்பாலானோர் மொராக்கோவை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்). தாராஜல் எல்லை வழியாகவும், கடற்கரை வழியாகவும் சியூட்டாவிற்குள் நுழையும் இந்த மக்களில் சிலர் “விவா எஸ்பானா”(Viva España!) என்ற கோஷங்களை எழுப்பியும், சாலைகளில் நடனமாடியும் வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியது.

ஸ்பெயினுக்குள் நுழையும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர்: என்ன காரணம்?

ஸ்பெயினுக்குள் நுழையும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர்: என்ன காரணம்?

மொராக்கோவிற்கு திரும்பிய மக்கள்

இந்நிலையில் சியூட்டாவிற்குள் அத்துமீறி நுழைந்தவர்களில் 37,500க்கும் அதிகமானோர் மீண்டும் மொராக்கோவிற்கு திரும்பி சென்று விட்டதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு | Ceuta Crisis 37500 Refugees Return To Morocco

ஒரே நேரத்தில் நிகழ்ந்த இந்த அதிகமான அகதிகள் இடம்பெயர்வில் கிட்டத்தட்ட 57 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நெருக்கடியான சூழ்நிலை குறித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது ஸ்பெயின் இறையாண்மை மீது நடந்த மிகப்பெரிய தாக்குதல் மற்றும் மீறல் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US