மோசமான சாதனையை படைத்த இந்திய பந்துவீச்சாளர்கள்; இருப்பினும் வெற்றி பெற்ற இந்தியா
india won vs 1st t20 vs nz all indian bowlers concede 40 runs as unwanted record: நியூஸிலாந்திற்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.
இந்திய பந்துவீச்சாளர்களின் மோசமான சாதனை
நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 T20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

ஏக்லி ஓவலில் இன்று தொடங்கிய முதல் T20 போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பட்டம் ஆடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ஓட்டங்கள் குவித்தது.
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்சு 82 ஓட்டங்கள் குவித்தார்.
இந்தியா தரப்பிலும் பந்து வீசிய 5 பந்து வீச்சாளர்களும், 40 மற்றும் அதற்கு அதிகமான ஓட்டங்களை வழங்கினர்.

ஒரே போட்டியில் அனைத்து இந்திய பந்துவீச்சாளர்களும் தலா 40 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை விட்டுக்கொடுத்தது இதுவே முதல் முறையாகும்.
அபிஷேக் சர்மா சாதனை
இதனையடுத்து, 226 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, அபிஷேக் சர்மா இன்னிங்ஸின் தொடக்கத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி உலக சாதனையை படைத்தார்.

7வது முறையாக முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிய அவர், இதன் மூலம் இன்னிங்ஸின் தொடக்கத்தில் முதல் பந்திலேயே அதிக சிக்ஸர்களை அடித்ததற்கான சாதனையை படைத்துள்ளார்.
அபிஷேக் சர்மா 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், சஞ்சு சாம்சன் 67 ஓட்டங்கள் குவித்து நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தார்.

அதன் பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் நமன் தீர் தலா 42 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

இந்திய அணி, 19.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 230 ஓட்டங்கள் குவித்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2வது T20 போட்டி வரும் அக்டோபர் 24 ஆம் திகதி நடைபெற உள்ளது.