பெண்களை கர்ப்பமாக்கும் ஆண்களுக்கு ரூ.13 லட்சம்.. “All India pregnant job agency" என்ற பெயரில் நூதன மோசடி
பெண்களை கர்ப்பமாக்கும் வேலை என்று கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை பொலிஸார் கைது செய்தனர்.
All India pregnant job agency
இந்திய மாநிலமான பீகார், நவாடா பகுதியில் 'All India pregnant job agency' என்ற பெயரில் நூதன மோசடியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள், பெண்களை கர்ப்பமாக்கினால் காசு என்று விளம்பரம் செய்து வந்தனர்.
அதாவது, குழந்தை பெற முடியாமல் இருக்கும் பெண்களை கர்ப்பமாக்கினால் லட்சங்களில் பணம் கிடைக்கும் என்பது தான் விளம்பரம்.
Representative image
இந்த நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளும் நபர்கள் குழந்தை பெற முடியாமல் தவிக்கும் பெண்களை தேர்வு செய்து அவர்களை கர்ப்பமாக்கலாம். அவர்கள் ரூ.799 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். பின்னர், பெண்களின் புகைப்படங்களை நிறுவனத்தினர் அவர்களுக்கு வழங்குவர்.
இதில், பெண்களின் அழகை பொறுத்து ரூ.5,000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வைப்புத்தொகையை இளைஞர்களிடம் வசூல் செய்வார்கள். இதனையடுத்து, அந்த பெண்கள் இளைஞருடன் இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அப்போது அந்த பெண் கர்ப்பமானால் சம்மந்தப்பட்ட ஆண்களுக்கு 13 லட்சம் வரை தொகை வழங்கப்படும்.இதில், அந்த பெண் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் ஆறுதல் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பொலிஸார் கைது
இதனால், இந்த நிறுவனத்தில் பல இளைஞர்கள் பதிவு செய்தனர். ஆனால், பணத்தை கட்டிய ஆண்களுக்கு பல நாட்கள் ஆகியும் பெண்களின் புகைப்படத்தை அனுப்பவில்லை. அப்போது தான் அவர்களுக்கு அது மோசடி கும்பல் என தெரியவந்தது.
பின்னர், ஆண்கள் இது குறித்து பொலிஸாரிடம் புகார் அளித்தனர். இதனை பீகார் பொலிஸார் சிறப்பு புலனாய்வுக் குழு பொலிஸாரிடம் விசாரணைக்கு விட்டனர். விசாரணையின் போது இந்த மோசடிக்கு முக்கியமான முன்னா என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, அவரது கூட்டாளிகளான 8 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |