பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் முழு சைவ விருந்து!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்சில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அழைப்பின் பேரில் அபுதாபி சென்றார்.
மோடிக்கு சைவ விருந்து
அபுதாபியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கிய மதிய உணவின் போது பிரத்யேக சைவ மெனு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Qasr-al-Watan ஜனாதிபதி மாளிகையில் நடந்த விருந்தில் கோதுமை, பேரீச்சம்பழ சாலட் மற்றும் உள்நாட்டில் பெறப்பட்ட ஆர்கானிக் காய்கறிகள் ஆகியவை வழங்கப்பட்டன.
தொடக்கத்தில், விருந்தினர்களுக்கு சுவையான மசாலா சாஸில் வறுக்கப்பட்ட காய்கறிகள் வழங்கப்பட்டது. மேலும், கருப்பு பருப்பு, உள்ளூர் கோதுமை மற்றும் காலிஃபிளவர் தந்தூரி மற்றும் கேரட் தந்தூரி போன்ற உணவுகள் வழங்கப்பட்டது.
மேலும், விருந்தின் முடிவில் இனிப்புக்காக உள்ளூர் பருவகால பழங்கள் வழங்கப்பட்டது.
மெனுவில் முட்டை பொருட்கள் இல்லை
பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட அனைத்து உணவுகளும் தாவர எண்ணெய்களால் தயாரிக்கப்பட்டது என்றும், பால் அல்லது முட்டைப் பொருட்கள் இல்லை என்றும் மெனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
It is always gladdening to meet HH Sheikh Mohamed bin Zayed Al Nahyan. His energy and vision for development are admirable. We discussed the full range of India-UAE ties including ways to boost cultural and economic ties. @MohamedBinZayed pic.twitter.com/XCBWW8cP38
— Narendra Modi (@narendramodi) July 15, 2023
இந்தியா திரும்பும் மோடி
ஒரு நாள் பயணமாக அபுதாபி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருடன் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த ஆண்டு விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான வர்த்தகம் குறிப்பிடத்தக்க வகையில் 20 சதவீதம் உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒருநாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு திரும்புகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |