பிரான்ஸ் முதல் பெண்மணிக்கு பட்டுச் சேலை: பரிசுமழை பொழிந்த இந்திய பிரதமர்
இந்திய பிரதமரின் பிரான்ஸ் பயணம் பல்வேறு பிரபல ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ள நிலையில், அவர் பிரான்ஸ் தலைவர்களுக்கு பல்வேறு நினைவுப் பரிசுகளை வழங்கியதைக் குறித்த செய்திகளும் வெளியாகி வருகின்றன.
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சந்தன மர சிதார்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு சந்தன மரத்தால் செய்யப்பட்ட கலைவண்ணம் கொண்ட சிதார் ஒன்றை பரிசளித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
முதல் பெண்மணிக்கு பட்டுச் சேலை பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவியும், பிரான்சின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மேக்ரானுக்கு, இந்தியாவின் தெலுங்கானாவில் நெய்யப்பட்ட பாரம்பரியம் மிக்க Pochampally silk என்னும் பட்டுச் சேலை ஒன்றை சந்தனப் பேழை ஒன்றில் வைத்து பரிசளித்தார் மோடி.
மற்ற தலைவர்களுக்கும் பரிசு
பிரான்ஸ் பிரதமரான Élisabeth Borneக்கு, விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட ராஜஸ்தான் மார்பிள் மேஜை ஒன்று, பிரெஞ்சு செனேட் தலைவரான Gerard Larcherக்கு சந்தன மரத்தால் செய்யப்பட்ட கலைவண்ணம் கொண்ட யானை சிலை ஒன்று, பிரான்ஸ் நாடாளுமன்ற தலைவரான Yaël Braun-Pivetக்கு கைகளால் நெய்யப்பட்ட காஷ்மீரத்துப் பட்டு கார்ப்பெட் என ஆளாளுக்கு ஒவ்வொரு நினைவுப்பரிசுகளை வழங்கி திக்குமுக்காட வைத்துள்ளார் இந்திய பிரதமர் மோடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |