பாரிஸுக்கு உங்களை வரவேற்கிறேன் மோடி! கட்டித் தழுவிய பிரான்ஸ் ஜனாதிபதி
பிரெஞ்சு தேசிய தின கொண்டாட்டத்தில் கௌரவ விருந்தினராக மேக்ரானுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இந்திய பிரதமர் பிரான்ஸ் வருகை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று நடைபெறும் பிரெஞ்சு தேசிய தினத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பாஸ்டில் தின அணிவகுப்பின் ஒரு பகுதியாக இந்திய முப்படைகளின் குழு இடம்பெறும் என்றும், இந்திய விமானப்படையின் விமானம் ஒன்றும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் பிரான்ஸ் பிரதமர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்பு அளித்தார்.
India and France are celebrating 25 years of strategic partnership made of trust and friendship, which are only getting stronger with time.
— Emmanuel Macron (@EmmanuelMacron) July 13, 2023
Dear @NarendraModi, welcome to Paris. pic.twitter.com/s03htftpTw
மேக்ரானுடன் விருந்து
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மேக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒரு தனிப்பட்ட விருந்தில் கலந்து கொண்டார். அங்கு பிரதமர் மோடிக்கு பிரான்சின் உயரிய கௌரவமான Grand Cross of the Legion of Honour வழங்கப்பட்டது.
முன்னதாக மேக்ரான் வெளியிட்ட பதிவில், 'இந்தியாவும், பிரான்சும் நம்பிக்கை மற்றும் நட்பின் 25 ஆண்டுகால மூலோபாய கூட்டாண்மையைக் கொண்டாடுகின்றன, அவை காலப்போக்கில் வலுவடைகின்றன. பாரிஸுக்கு உங்களை வரவேற்கிறேன் அன்புள்ள நரேந்திர மோடி' என கூறினார்.
PTI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |