களத்திற்கு உள்ளே வந்த 37 வினாடிகளில் Red Card! வெளியேற்றப்பட்ட வீரர்..அப்படி என்ன செய்தார்? (வீடியோ)
கெடஃபி அணிக்கு எதிரான லா லிகா போட்டியில் ரியல் மாட்ரிட் அபார வெற்றி பெற்றது.
லா லிகா தொடரின் இன்றையப் போட்டியில் ரியல் மாட்ரிட் (Real Madrid) மற்றும் கெடஃபி (Getafe) அணிகள் மோதின.
Allan Nyom vs Real Madrid
— 🫵🏽 (@idoxvi) October 19, 2025
50 seconds played | LaLiga legend | Greatest cameo ever? pic.twitter.com/DQoiWreh6L
ரியல் மாட்ரிட் அணிக்கு கெடஃபி வீரர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்ததால், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை.
இரண்டாம் பாதியின் 77வது நிமிடத்தில் கெடஃபி அணி வீரர் ஆலன் நியோம் (Allan Nyom) சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
76வது நிமிடத்தில் மாற்று வீரராக களத்திற்குள் வந்த நியோம், எதிரணி வீரர் வினீசியஸ் ஜூனியரை முகத்தில் Clothesline tackle மூலம் தாக்கினார்.
இதன் காரணமாக அவர் உள்ளே வந்த 37 வினாடிகளில் நடுவரின் தீர்ப்பால் வெளியேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த மூன்று நிமிடங்களில் (80) நட்சத்திர கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) அடித்த கோல், ரியல் மாட்ரிட் அணியின் வெற்றி கோலாக மாறியது.
84வது நிமிடத்தில் கெடஃபி வீரர் அலெக்ஸ் சான்கிரிக்ஸ், எதிரணி வீரரை மோதி விழ வைத்ததால் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |