Amazon: அமேசான் CEO பதவியிலிருந்து விலகுகிறார் ஜெப் பிஸோஸ்
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்துள்ள அமேசானின் CEO பதிவியிலிருந்து விலகுகிறார் ஜெப் பிஸோஸ்.
கடந்த, 27 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், ஜெப் பிஸோஸ் என்பவர், தனது வீட்டின் கார் ஷெட்டில் வெறும் ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாக உருவாக்கிய அமேசான், தற்போது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெப் பிஸோஸ் (Jeff Bezos) பதவியிலிருந்து விலக முடிவு செய்ததாக முன்பு செய்திகள் வெளியாகிய நிலையில், இன்று, அதாவது ஜூலை 5-ம் தேதி தனது பதவி விலகலை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்கிறார்.
இதை அடுத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆண்டி ஜாஸ்ஸி நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலக அளவில் பரந்து விரிந்து, 1.7 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பு கொண்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக திகழும் அமேசான், ஆன்லைன் வர்த்தகம் (Online Shopping) மட்டுமல்லாது செயற்கை நுண்ணறிவு (Artificila Intelligence) சார்ந்த பொருள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இ
உலகின் பெரும் பணக்காரராக இருக்கும் ஜெஃப் பிஸோஸின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு 20,000 கோடி டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.