அமேசான் விமான விபத்து... மரணத்தின் விளிம்பில் 4 பிள்ளைகளிடம் தாயார் சொன்ன கடைசி வார்த்தை
அமேசான் வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் நான்கு சிறார்கள் அதிசயமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த பிள்ளைகளின் தாயார் மரணத்தின் விளிம்பில் கடைசியாக கூறிய வார்த்தை நெஞ்சை உலுக்கியுள்ளது.
40 நாட்களுக்கு பின்னர் உயிருடன்
கொலம்பிய வனப்பகுதியில் மே 1ம் திகதி விமான விபத்தில் சிக்கிய Magdalena Mucutuy என்ற தாயாரின் நான்கு பிள்ளைகள், சம்பவம் நடந்து 40 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
@AFP
இந்த நிலையில், அந்த நான்கு சிறார்களும் அமேசான் வனப்பகுதியில் 40 நாட்கள் உயிர் தப்பியது எப்படி என்ற திகிலை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகும் நிலையில், தாயார் மக்தலேனா மரணத்தின் விளிம்பில் தமது பிள்ளைகளுக்கு கூறிய கடைசி தகவல் குறித்தும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பொகோட்டா பகுதியில் பேசிய மக்தலேனாவின் கணவர் Ranoque, மே 1ம் திகதி விபத்து நடந்த பின்னர் நான்கு நாட்கள் வரையில் மக்தலேனா உயிருக்கு போராடியுள்ளார். விபத்துக்கு பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பில் தமது மகளுக்கு மொத்தமும் தெரியும்.
@AP
அவர்களது தாயார் நான்கு நாட்கள் உயிருக்கு போராடினார் என்பதை தமது மகள் தெரிவித்து அறிந்து கொண்டதாக Ranoque குறிப்பிட்டுள்ளார். இறக்கும் முன்னர் மக்தலேனா தமது பிள்ளைகளிடம், போங்கள், தந்தை கற்றுத்தந்தவற்றை பயன்படுத்தி தப்பித்துக்கொள்ள வழி பாருங்கள் என கூறியுள்ளார்.
Cessna 206 என்ற அந்த குட்டி விமானத்தில் மக்தலேனா தமது நான்கு பிள்ளைகளுடன் Araracuara பகுதியில் இருந்து San Jose del Guaviare பகுதிக்கு பயணப்பட்டுள்ளார்.
மரத்தடிகளில் ஒளிந்து கொண்டனர்
இந்த நிலையில், திடீரென்று விமானம் இயந்திர கோளாறில் சிக்க ரடாரில் இருந்தும் மாயமானது. இதனையடுத்து அடர்ந்த காட்டுக்குள் விபத்துக்குள்ளான விமானத்தை கொளம்பிய ராணுவம் 40 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடித்தது.
@AFP
விபத்து நடந்த பகுதியில் இருந்து 3 மைல்களுக்கு அப்பால் இருந்து நான்கு சிறார்களையும் ராணுவம் மீட்டுள்ளனர். தற்போது அவர்கள் பொகோட்டா பகுதியில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
விபத்துக்கு பின்னர் அந்த 40 நாட்களும் பாம்புகள், விலங்குகள் மற்றும் கொசுக்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் மரத்தடிகளில் ஒளிந்து கொண்டனர்.
மேலும், Huitoto பூர்வகுடி இனத்தை சேர்ந்த இந்த சிறார்கள், விபத்துக்கு பின்னர் உயிர் தப்ப பழங்கள், மரவள்ளிக்கிழங்கு மாவு மற்றும் விதைகளையே உணவாக்கி வந்துள்ளனர்.
@AP
இதனிடையே, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நான்கு சிறுவர்களையும் கொளம்பிய ஜனாதிபதி Gustavo Petro நேரில் சென்று சந்தித்ததுடன், அவர்கள் தொடர்பில் மருத்துவர்களிடம் விசாரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.