அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் அரியவகை பசும் பால் - ஒரு லீற்றர் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியும் அவரது குடும்பத்தினரும் குடிக்கும் அரியவகை பசும் பாலின் விலையானது வெளியாகியுள்ளது.
கோடியில் புரளும் சச்சின் டெண்டுல்கரின் மகள்; அவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை தனியாக உருவாக்கியது எப்படி?
அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் பால்
பால் என்பது சிறியவர் முதல் வயது போனவர்கள் வரை குடிக்கும் அற்புத பானமாகும்.
இது ஊட்டச்சத்து நிறைந்தது மட்டுமல்ல, தசைகள், எலும்புகள், பற்கள், தோல் மற்றும் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் பால் குடிக்கிறார்கள். தற்போதைய காலத்தில் பொதி செய்யப்பட்ட பாலை தான் பலரும் பருகி வருகிறார்கள்.
ஆனால் அம்பானி குடும்பத்தில் இருப்பவர்கள் குடிக்கும் பாலிலும் வித்தியாசமான பாலை தான் குடிக்கிறார்கள்.
அதாவது மிகவும் பிரபலமான மற்றும் அதன் நன்மைகளுக்காக பரிந்துரைக்கப்படும் பசும்பாலின் ஒரு இனம் உள்ளது. அந்த இனத்தில் இருக்கும் மாடுகளில் இருந்து கரக்கப்படும் பாலை தான் குடிக்கிறார்கள்.
கேரளாவில் பிறந்து, படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த நபர்; தற்போது சுந்தர் பிச்சையை விட அதிக சம்பாதித்தது எப்படி?
அதிக பால் உற்பத்தி செய்யும் இனமாக அறியப்படும் ஹோல்ஸ்டீன்-ஃப்ரீசியன் (Holstein-Friesian breed) இன மாட்டுப்பாலை தான் குடிக்கிறார்கள்.
நெதர்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட Holstein-Friesian மாட்டு இனமானது, உலகளவில் தொழில்துறை பால் பண்ணையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
பொதுவாக இந்த மாடுகள் கருப்பு மற்றும் வெள்ளை அல்லது சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
ஒரு ஆரோக்கியமான கன்று பிறக்கும் போது 40 முதல் 50 கிலோ அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்.
ஒரு வயது வந்த மாடு பொதுவாக 680-770 கிலோ எடையுள்ளதாக இருக்கும். ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் கொடுக்கும் திறனையும் குறித்த மாடு வைத்துள்ளது.
ஒரு லீற்றர் எவ்வளவு தெரியுமா?
முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் புனேவில் இருந்து வரும் இந்த இனத்தின் பாலை குடிக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.
இது ஊட்டச்சத்து நிறைந்த குணங்களுக்கு பெயர் பெற்றது.
இத்தாலியில் நிகழ்ந்த ஆனந்த் அம்பானி திருமண விழா - விருந்தினர்களுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசு என்ன தெரியுமா?
புனேயில் உள்ள பாக்யலட்சுமி பால் பண்ணையில் 3000க்கும் மேற்பட்ட பசுக்களுடன் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் இந்த இன மாடுகள் வளர்க்கப்படுகின்றன.
அதிக வருவாய் தரும் இந்த மாட்டு இனத்திற்கு, கேரளாவில் இருந்து வரும் சிறப்பு ரப்பர் பூசப்பட்ட மெத்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.
குறித்த மாடானது சுத்திகரிக்கப்பட்ட RO தண்ணீரை தான் குடிக்கிறது.
இந்த பால்பண்ணையில் ஒரு லிட்டர் பால் விலை சுமார் இந்திய மதிப்பில் ரூ.152 (இலங்கை மதிப்பில் ரூ.550.41) ஆகும்.
நீங்கள் சாதாரணமாக வாங்கும் பசும் பாலின் விலையை விட இந்த அம்பானி குடும்பத்தில் வாங்கப்படும் பாலின் விலை அதிகமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |