இத்தாலியில் நிகழ்ந்த ஆனந்த் அம்பானி திருமண விழா - விருந்தினர்களுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசு என்ன தெரியுமா?
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் இரண்டாம் திருமண விழா கொண்டாட்டத்தில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவில் பிறந்து, படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த நபர்; தற்போது சுந்தர் பிச்சையை விட அதிக சம்பாதித்தது எப்படி?
இத்தாலியில் நிகழ்ந்த அம்பானி குடும்ப விழா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வருகிற ஜூலை மாதம் 12 திகதி நடைபெறவிருக்கிறது.
இதற்கு முந்தைய நாள் கொண்டாட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இத்தாலியின் சொகுசு கப்பலில் இரண்டாம் கட்ட விழா நிகழ்ந்தது.
முதற் கட்ட விழாவானது மார்ச் 1 முதல் 3 ஆம் திகதி வரை ஜாம்நகரில் நிகழ்ந்தது. அதையடுதது இரண்டாம் கட்ட விழாவானது மே 28 முதல் 30 வரை சொகுசு கப்பலில் நடைபெற்றது.
குறித்த கப்பல் பயணமானது இத்தாலியின் நகர துறைமுகத்திலிருந்து புறப்பட்டு தெற்கு பிரான்சில் பயணத்தை முடித்தது.
இதில் சுமார் 800 விருந்தினர்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள். இதற்காக பெருமளவில் செலவழித்து கொண்டாட்டத்தை குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்தாலியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துக்கொண்ட விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள்
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி விருந்தினர்களுக்கு ஆடம்பரமான பரிசுகளை வழங்கியுள்ளனர். விருந்தினர்கள் LV பைகள், தங்க நகைகள், வடிவமைப்பாளர்கள் வைத்து செய்யப்பட்ட காலணிகள் மற்றும் இரவில் அணியும் ஆடைகள் போன்ற ஆடம்பரமான பொருட்களை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 12 தனியார் விமானங்கள், ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் செலவில், குடும்பம், நண்பர்கள் மற்றும் நிகழ்ச்சிப் பணியாளர்கள் வருவதற்கு நியமிக்கப்பட்டன.
அவர்கள் பார்சிலோனாவிற்கு வந்தடைந்தபோது, விருந்தினர்கள் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royces), பென்ட்லீஸ் (Bentleys), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benzes) மற்றும் BMW உள்ளிட்ட 150 உயர்தர வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
விழா நடைபெற்ற சொகுசு கப்பலில் உயர்தர வசதிகளில் நீச்சல் குளங்கள், அதிநவீன ஸ்பா, உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாடும் பகுதி மற்றும் தியேட்டருக்கு அருகில் உள்ள இரவு விடுதி போன்றவை இருந்துள்ளது.
விருந்தினர்கள் தங்குவதற்கு ஒரு அறைக்கு பொதுவாக $1,849 (சுமார் ரூ. 1.53 லட்சம்), ஒரு இரவுக்கு $5,736 (சுமார் ரூ.4.70 லட்சம்) செலவழிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் கரீம்நகரில் கைவினைஞர்களால் செய்யப்பட்ட வெள்ளி நகைகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |