ரிலையன்ஸின் கீழ் புதிய துணை நிறுவனத்தை தொடங்கிய முகேஷ் அம்பானி
ரிலையன்ஸின் கீழ் புதிய துணை நிறுவனத்தை முகேஷ் அம்பானி தொடங்கியுள்ளார்.
Reliance Industries Limited (RIL) நிறுவனம் Reliance Intelligence Limited எனும் புதிய துணை நிறுவனத்தை தொடங்கியுள்ளது.
இந்நிறுவனம் முழுமையாக Reliance-க்கு சொந்தமாகும். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பாரிய அளவில் முதலீடு செய்யும் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இந்நிறுவனம் பார்க்கப்படுகிறது.
Reliance Intelligence Limited நிறுவனம், செப்டம்பர் 9-ஆம் திகைத்து இந்திய நிறுவன விவகார அமைச்சகத்திலிருந்து பதிவு சான்றிதழ் பெற்றுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற RIL-ன் ஆண்டு பொதுக்கூட்டத்தில், முகேஷ் அம்பானி இந்த AI மையத்தை உருவாக்கும் திட்டத்தை அறிவித்திருந்தார்.
Reliance Intelligence நிறுவனத்தின் முக்கிய நோக்கங்கள்
- இந்தியாவில் அடுத்த தலைமுறை AI கட்டமைப்புகளை உருவாக்குதல்
- உலகளாவிய AI கூட்டாண்மைகளை மேம்படுத்துதல்
- இந்தியாவிற்கான தனிப்பட்ட AI சேவைகளை உருவாக்குதல்
- AI துறையில் திறமையான மனித வளத்தை உருவாக்குதல்
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் gigawatt அளவிலான AI தரவு மையங்களை ரிலையன்ஸ் கட்ட தொடங்கியுள்ளது. இவை Reliance-ன் பசுமை ஆற்றல் திட்டத்தின் கீழ் செயல்படும்.
இந்த புதிய நிறுவனம், இந்தியாவின் AI துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும் பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப்பின் வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.2200 கோடி நிவாரணம் - இந்தியா திட்டம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Reliance Intelligence Limited launch, Mukesh Ambani AI company 2025, Reliance AI subsidiary news, Jamnagar AI data centers Reliance, Reliance green energy AI, India AI infrastructure Reliance, Ambani AGM 2025 announcements, Reliance AI partnerships Google Meta, Deep tech investments India, Reliance Industries AI strategy