வெள்ள நிவாரண நிதிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி நன்கொடை
உத்தரகாண்ட் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 25 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரிலையன்ஸ் இயக்குநர் ஆனந்த் அம்பானி நன்கொடை அளித்துள்ளார்.
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு அம்பானி எழுதிய கடிதத்தில், உத்தரகாண்ட் மக்களுக்கான பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த மாநில அரசின் முயற்சிகளுக்கு இந்த நன்கொடை துணைபுரியும் என்று நம்புவதாகக் கூறினார். இதையடுத்து அம்பானிக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி நன்றி தெரிவித்தார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தின் பல்வேறு கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகளில் ஈடுபடுவதில் மகிழ்ச்சி அடைவதாக அம்பானி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
2021-ஆம் ஆண்டில், கோவிட் நிவாரணப் பணிகளுக்காக ரிலையன்ஸ் அறக்கட்டளை மேலும் 5 கோடி ரூபாயை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கியது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியும் கடந்த ஆண்டு பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில் கமிட்டிகளுக்கு தலா 2.5 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Reliance Industries donates Rupees 25 crore, Uttarakhand flood relief fund, Anant Ambani, Reliance, Mukesh ambani