இரண்டு பழங்குடியினரிடையே மோதல்.... கொத்தாக கொல்லப்பட்ட பலர்
பப்புவா நியூ கினியாவின் புறநகர் மலைப் பகுதியில் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வன்முறைக்கு பஞ்சமிருக்காது
எங்கா மாகாணத்தில் இரு பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
@getty
சம்பவயிடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் விரிவான பின்னணி இன்னமும் வெளியாகவில்லை என்றே கூறுகின்றனர். பொதுவாக மலைப்பகுதியில் வன்முறைக்கு பஞ்சமிருக்காது என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், ஆனால் இந்தக் கொலைகள் பல வருடங்களில் மிக மோசமானவை என்று குறிப்பிட்டுள்ளனர்.
நிலம் மற்றும் சொத்துக்களை
எங்கா மாகாணத்தில் அல்லது சுற்றுவட்டார மலைப்பகுதியில் இதுபோன்ற ஒரு கொடூரம் சமீப ஆண்டுகளில் நடந்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
@getty
அதிகரித்து வரும் பழங்குடியின வன்முறை என்பது பெரும்பாலும் நிலம் மற்றும் சொத்துக்களை விநியோகம் செய்வதில் தான் அதிகமாக காணப்படுகிறது. கடந்த ஆண்டு எங்கா மாகாணத்தில் மூன்று மாத ஊரடங்கு ஏற்படுத்தப்பட்டதுடன், பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |