இது முடிவல்ல! மீண்டும் தாக்குதல் தொடரலாம்.. காபூலுக்கு அடுத்த மரண ஓலை அடித்த அமெரிக்கா
காபூலில் மீண்டும் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அவர்களின் ஆட்டம் கொடுமையாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில் நேற்று காபூல் விமானநிலையத்தில் இருக்கும் மக்களுக்கு ஆபத்து என்று அனைவரும் வெளியேறும்படி அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து காபூலில் நேற்று ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 100 பேருக்கு மேல் உயிர் இழந்துள்ளனர். காபூல் விமானநிலையத்தை சுற்றி ஒரு சிறிய தண்ணீர் கால்வாய் இருந்தது.
இது தான் அங்குள்ள மக்களுக்கு நீரின் ஆதாரமாய் விளங்கியது. ஆனால் இப்போது அந்த தண்ணீர் முழுவதும் இரத்த கரையாக காட்சியளித்தும் ஆங்காகே சிதறி கிடைக்கும் பிணங்களை ராணுவ அதிகாரிகள் மீட்டு வரும் சம்பவம் மனதை உருக்கியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க மத்திய கமாண்ட் படையின் தலைவர் ஜெனரல் ஃபிரான்க் மெக்கென்ஸி கூறியது, காபூல் விமானநிலையத்தில் இன்னும் பல தாக்குதல்கள் நடைபெறலாம்.
ராக்கெட் லாஞ்சர்கள் மூலமும் கார் அல்லது வேறு வாகனங்களில் வெடிகுண்டை நிரப்பியும் தாக்குதல் நடத்தப்படலாம். இருப்பினும் நாங்கள் எதையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.