வெறும் 47 டாலருக்கு திருமண உடை: குறைந்த செலவில் திருமணம் செய்து அசத்திய காதல் ஜோடி!
அமெரிக்காவில் மிகக்குறைந்த செலவில் திருமணத்தை திட்டமிட்டு அதனை 500 டாலர்களில் கியாரா மற்றும் ஜோயல் ப்ரோகன்ப்ரோ செய்து முடித்து இருப்பது அந்த பகுதிகளில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்த கியாரா மற்றும் ஜோயல் ப்ரோகன்ப்ரோ கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த நிலையில் அவர்களது திருமணம் தற்போது நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணத்தை மிகக்குறைந்த செலவில் செய்ய திட்டமிட்ட கியாரா மற்றும் ஜோயல் ப்ரோகன்ப்ரோ தம்பதி அதனை திறந்தவெளி சாலையில் வெறும் 500 டாலர்களில் செய்து முடித்து இருக்கின்றனர்.
இதற்காக மணப்பெண் கியாரா வெறும் 47 டாலர்கள் மதிப்புள்ள திருமண ஆடையை தேர்ந்து எடுத்து இருப்பதாகவும், திருமண தம்பதியர்களுக்கு வழங்கும் பரிசு, பூக்கள், கேக் மற்றும் விருந்தினருக்கு வழங்கப்படும் உணவு ஆகிய அனைத்தையும் வந்திருந்த உறவினர்கள் மற்றும் விருந்தினர்களே வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கியாரா, "இது எங்கள் கனவு திருமணமா? இல்லை, எங்களிடம் உள்ள வளங்களை நல்ல முறையில் பயன்படுத்தினோமா? ஆம். எதற்காக நாங்கள் எங்களுடைய உறவு எப்படி என்ற தெரியாத நபர்களுக்காக கடன் வாங்கி அவர்களுக்காக உணவு, மதுபானம் கொண்டாட்டங்கள் போன்றவற்றை வழங்க வேண்டும் அந்த கடனை அடைப்பதற்கு எதற்காக எங்கள் வாழ்நாள்களை நீட்டிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் எங்கள் திருமணத்திற்காக நான் 1500 டாலர்கள் வரை திருமண உடையை பார்த்து இறுதியில் 47 டாலர்கள் மதிப்புள்ள உடையை தேர்வு செய்தேன் இது எனக்கு மிக்கவும் பிடித்த அமைப்பிலேயே உள்ளது.
இப்போதும் திருமணத்திற்கு தேவையான சாட்சிகள், கடைசி வரை இணைந்து இருப்போம் என்று கடவுளிடம் நாங்கள் இருவரும் செய்துள்ள சபதம் என அனைத்தும் எங்கள் திருமணத்தில் இடம் பெற்று இருந்ததாக தெரிவித்துள்ளார்.
கடைசி வீரர் வரை உக்ரைன் போராட வேண்டும்... அமெரிக்கா மீது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் குற்றசாட்டு!