கடைசி வீரர் வரை உக்ரைன் போராட வேண்டும்... அமெரிக்கா மீது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் குற்றசாட்டு!
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை நீட்டிக்க மேற்கு நாடுகள் முயற்சிப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 55வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்ய ராணுவ படைகளை பின்னகர்த்தி தற்போது கிழக்கு எல்லை நகரங்களான டான்பாஸ் பகுதியில் ரஷ்யா கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில், உக்ரைனுக்கு உதவும் விதமாக அமெரிக்கா 800 மில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்க இருப்பதாக தெரிவித்தது மற்றும் உக்ரைனிய ராணுவ வீரர்களுக்கு தேவையான அனைத்து பயிற்சியையும் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தது.
??Minister of Defense of the Russian Federation Sergei #Shoigu:
— Russian Arms Control Delegation in Vienna (@armscontrol_rus) April 19, 2022
?“??The #US and the countries under its control seek to make the operation last as long as possible, and the continuing supplies of weapons to ??#Ukraine demonstrate their intention to fight to the last Ukrainian” pic.twitter.com/tZxg74kN8O
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைன் மீதான போரை முடிந்தவரை நீட்டிக்க விரும்புகின்றனர் மற்றும் உக்ரைனின் கடைசி வீரர் இருக்கும் வரை எதிர்த்து நின்று போராட்ட வேண்டும் என்பதற்காக மில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் வழங்கி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு குற்றம் சாட்டியுள்ளார்.
நீண்ட நாள்களாக பொதுவெளியில் தோன்றாத ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, செய்வாய் கிழமையான நேற்று செய்தியாளர்களை சந்தித்து உக்ரைன் உடனான போரை ரஷ்யா நீட்டிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து விதமான ஆயுத உதவிகளையும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காக போராடுகிறது: போலந்து பிரதமர் பேச்சு!