ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சி அமெரிக்காவுக்கு வெட்கக்கேடு! ஜோ பைடனை சாடும் சர்வதேச ஊடகங்கள்
அமெரிக்காவின் குழப்பமான பின்வாங்கல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இழைத்த துரோகம் என இடது மற்றும் வலதுசாரி ஊடகங்கள் ஒன்றிணைந்து குற்றம் சாட்டியுள்ளன.
ஆப்கானிஸ்தான் நெருக்கடியை ஜோ பைடன் கையாண்டதற்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் உள்ள அரசியல் பிளவு உள்ள ஊடகங்கள் தங்கள் கண்டனத்தில் ஒன்றிணைந்துள்ளன.
ஆப்கானிஸ்தானை 'கை கழுவுதல்' என்ற ஜோ பைடனின் அறிக்கை அமெரிக்க வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான செயல் என வால் ஸ்ட்ரீட் பத்திரிகை கண்டனம் தெரிவித்துள்ளது.
சிஎன்என் கட்டுரையாளர் கூறுகையில், ஆப்கானிஸ்தானின் தோல்வி மற்றும் குழப்பமான பின்வாங்கல் அமெரிக்க ஜனாதிபதிக்கான 'அரசியல் பேரழிவு' என குறிப்பிட்டுள்ளார்.
தி அட்லாண்டிக் பத்திரிகையில் கருத்து எழுதுபவர், அமெரிக்காவின் இந்த செயல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இழைத்த 'துரோகம்' என்று ஜோ பைடன் மீது 'அவமானச் சுமையை' வைக்கிறார்.
பிரிட்டிஷ் பிரஸ் பத்திரிகையின் கட்டுரையாளர்களும் இன்று ஜோ பைடனை தாக்கி எழுதினார். தி சன் தலையங்கத்தில் ஜோ பைடன் ஆப்கானிஸ்தான் குறித்த தொடர்ச்சியான எச்சரிக்கைகளை புறக்கணித்ததாகவும், பின்னர் ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு 20 ஆண்டுகளாக கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றதாகவும் எழுதியிருந்தன.