குழந்தை உரிமை கொண்டாடிய வாடகை தாய்: பெற்றோர் தொடுத்த வழக்கு: தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
அமெரிக்காவில் பிறந்த குழந்தையை வாடகை தாய் உரிமை கொண்டாடிய நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
வாடகை தாய் மூலம் குழந்தை
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஓமர் அகமது மற்றும் நெளஷீன் கில்கர் ஆகியோர் செவிலியரான மெக்கென்னா வெஸ்ட் என்ற வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக அவர்களுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் கருவில் குழந்தைக்கு ஏதேனும் உடல் நல குறைபாடுகள் இருந்தால் கருவை கலைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து சிசுவின் 20 வது வாரத்தில் எடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் குழந்தைக்கு இதய நோய் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் குழந்தை பிறந்த உடனே சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டியது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் வாடகை தாயிடம் கருவை கலைக்குமாறு கூறியதாகவும், ஆனால் குழந்தையை நானே வைத்துக் கொள்கிறேன் என்று வாடகை தாய் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இறுதியில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த அந்த வாடகை தாய் மெக்கென்னா வெஸ்ட், அந்த குழந்தையுடன் டெக்சாஸ் மாகாணத்திற்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெற்றோர்
இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் நீதிமன்றத்தில் வாடகை தாய் மீது வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் குழந்தையை தாங்கள் கலைக்க சொல்லவில்லை என்றும், வாடகை தாய் எங்களை ஏமாற்றி விட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இறுதியில் குழந்தையை அதன் உண்மையான தாயிடம் ஒப்படைக்குமாறும், குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் வழங்குமாறு உத்தரவிட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |