வீட்டை சுத்தம் செய்த போது கிடைத்த பழைய பெட்டி மூலம் அடித்த அதிர்ஷ்டம்.. சந்தோஷத்தில் தம்பதி செய்த செயல்
அமெரிக்காவில் தம்பதி ஒருவர் வீட்டை சுத்தம் செய்த போது கிடைத்த கருப்பு பெட்டியில் சுமார் 68 ஆயிரம் டொலர் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Ohio மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சமீபத்தில் வீட்டினை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது பச்சை நிறத்தில் ஒரு பெட்டியும் மற்றும் சாம்பல் நிறத்தில் ஒரு பெட்டியும் கிடைத்துள்ளது.
முதலில் அதற்குள் விளையாட்டுப் பொருட்கள் ஏதேனும் இருக்கும் என்று நினைத்து திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெட்டிகளில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது.
அதாவது பச்சை நிற பெட்டியில் சுமார் 23 ஆயிரம் அமெரிக்க டாலர்களும், சாம்பல் நிற பெட்டியில் 45 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் இருந்துள்ளது. இதைக்கண்டு தம்பதியினர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட தம்பதியினர் கூடியதாவது, இவ்வளவு பணம் எங்களுக்கு கிடைக்கும் என்று நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இதன் மூலம் எங்களது கடன்களை அடைத்து விடுவோம் என்று கூறியுள்ளனர்.