காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பழிக்குப்பழி! ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்... முக்கிய தளபதி கொல்லப்பட்டார்
காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பழிவாங்க ஐஎஸ் தீவிரவாதிகள் முகாம்கள் மீது அமெரிக்கா அதிரடியாக தாக்குதலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காபூல் விமான நிலையத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 12 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெடிகுண்டு தாக்குதலுக்கு பழிவாங்க ஆப்கனில் தீவிரவாதிகளுக்கு எதிராக பதிலடியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
அதன்படி தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்க ஆளில்லா ட்ரோன்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்த நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஐஎஸ் கோராசான் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி கிழக்கு ஆப்கானில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் அவர் தான் காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையில் காபூல் விமானநிலைய வாயில்களான Abbey gate, East gate, North gate or the New Ministry of Interior gateல் உள்ள தங்கள் நாட்டுமக்கள் உடனே வெளியேற அமெரிக்கா உத்தவிட்டுள்ளது.
#BREAKING #AfghanistanCrisis #US launches drone strike against an Islamic State attack planner in eastern #Afghanistan (#Nangahar Province) on Friday, a day after #KabulAirportBlast that killed 13 U.S. troops pic.twitter.com/AzNtpW4oSX
— DD News (@DDNewslive) August 28, 2021