வெளியேறிய கடைசி அமெரிக்க வீரர்! முழு சுதந்திரம் பெற்ற ஆப்கன்.. வெற்றியை கொண்டாடும் தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் முழுவதுமாக வெளியானதையடுத்து தாலிபான்கள் வானவேடிக்கை நடத்தி வெற்றியை கொண்டாடினர்.
அமெரிக்க படைகள் வெளியேறிய உடனே ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பகுதிகளையும் தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை குறி வைத்து பல கொடுமைகளை செய்து வருகின்றனர்.
இதனால் தாலிபான்களிடம் இருந்து ஆப்கன் மக்களை காப்பாற்ற அமெரிக்க வீரர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வந்தனர். ஆனால் அமெரிக்க ராணுவ படைகள் 31ஆம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என்று தாலிபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் ஜோ பைடன் காபூலில் இருந்து அமெரிக்கா வெளியேற ஒப்புக்கொண்டது. அதன்படி அமெரிக்க தூதர் மற்றும் ராணுவ அதிகாரிகள் அடங்கிய கடைசி விமானம் நேற்று இரவு ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதுமாக வெளியேறியது.
அப்போது கடைசி அமெரிக்க ராணுவ வீரர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய புகைப்படத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டது. மேலும் ஆப்கான் மக்களுக்கு தேவையான உதவிகளை ஐநா சபை மற்றும் என்ஜிஓக்கள் மூலம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
"US commander, ambassador were last to board evacuation flight," AFP quotes General pic.twitter.com/eeemixtmx7
— ANI (@ANI) August 30, 2021
இதனைதொடர்ந்து அமெரிக்கர்கள் வெளியேறியதை கொண்டாடும் விதமாக காபூலில் தாலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஆப்கானிஸ்தான் முழு சுதந்திரம் பெற்றுவிட்டதாக தாலிபான்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.