அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு மோடி வழங்கிய விலையுயர்ந்த பரிசு என்ன தெரியுமா?
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், அவரது மனைவி ஜில் பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசு கொடுத்த தகவல் வெளியாகி உலக மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிக்கு பரிசு கொடுத்த பிரதமர் மோடி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, அமெரிக்காவில் பல துறைகள் சார்ந்த நிபுணர்களை சந்தித்துப் பேசினார்.
இன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் வரவேற்றனர்.
அப்போது, நடைபெற்ற சந்திப்பின்போது, பிரதமர் மோடி ஜனாதிபதி ஜோ பைடனுக்கு சந்தனப் பெட்டி ஒன்றையும், ஜில் பைடனுக்கு வைரக்கல்லான விநாயகர் சிலையை பரிசு கொடுத்தார்.
பதிலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு 20ம் நூற்றாண்டில் கையால் எழுதப்பட்ட புத்தகத்தையும், பழமை வாய்ந்த அமெரிக்க புகைப்பட கருவியையும் பரிசளித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு பரிசளித்த சந்தப் பெட்டி மைசூரிலிருந்து கொண்டு வரப்பட்டதாம். அதேபோல், 7.5 கேரட் வைரக்கல்லிலான விநாயகர் சிலை ஜெய்ப்பூரில் வடிவமைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
Prime Minister Narendra Modi presents a special sandalwood box to US President Joe Biden that has been handcrafted by a master craftsman from Jaipur, Rajasthan. The sandalwood sourced from Mysore, Karnataka has intricately carved flora and fauna patterns. pic.twitter.com/fsRpEpKJ4W
— ANI (@ANI) June 22, 2023
#WATCH | Prime Minister Narendra Modi meets President of the United States Joe Biden at The White House, in Washington, DC.
— ANI (@ANI) June 21, 2023
(Source: Reuters) pic.twitter.com/wEr57FS2NX
"I thank the President of the United States Joe Biden and First Lady Jill Biden for hosting me at the White House today. We had a great conversation on several subjects," tweets PM Narendra Modi https://t.co/MSJME4A6Qi pic.twitter.com/VZcjWgINIR
— ANI (@ANI) June 22, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |