காசாவில் அமெரிக்காவின் அதிசய துறைமுகம் - பின்னணியில் இருக்கும் சதி என்ன?
பட்டினியால் தவிக்கும் காசா மக்களுக்கு உணவுப் பொருட்களை கடல் வழியாக வழங்குவதற்காகவென்று கூறி, காசாவில் ஒரு மிதக்கும் துறைமுகத்தை அமைக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா நேரடியாக இறங்கியுள்ளது.
காசாவில் உள்ள மக்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதற்காக காசாவில் துறைமுகம் ஒன்று அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக அமெரிக்கா அறிவித்த ஒரிரு நாட்களிலேயே, ஓர் மிதக்கும் துறைமுகத்தை அமைப்பதற்கு தேவையான உபகரணங்களுடன் அமெரிக்காவின் கப்பல் மத்தியதரைக்கடலை நோக்கி புறப்பட்டது.
மத்தியதரைக்கடலில் காசா கடற்கரையில் அந்தத் துறைமுகத்தை அமைக்கும் பணியில் 1000 இற்கும் அதிகமான அமெரிக்க படைவீரர்கள் ஈடுபட உள்ளதாகவும் இரண்டு மாதங்கள் வரை அந்த தற்காலிக மிதக்கும் துறைமுகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய இராணுவமும் அந்தத் துறைமுகப் பணியில் ஈடுபட உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
அதாவது காசாவின் கரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்குலக இராணுவத்தினர் நிலைகொள்ளப்போகின்றார்கள் இன்னும் சில தினங்களில்.
இது ஒரு மனிதாபிமான நகர்வாக வெளியே காண்பிக்கப்பட்டாலும், இந்த துறைமுக விவகாரத்தில் பின்னால் ஏதாவது பாரிய இராணுவ நகர்வு இருக்கின்றதா என்ற சந்தேகத்திற்கான விளக்கத்தை இந்த வீடியோ மூலம் அறிந்துக்கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |