விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு:174 பயணிகள் நிலை? பரபரப்பு வீடியோ
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் டம்பாவில் தரை இறங்கும் கியரில் கோளாறு ஏற்பட்டது, இருப்பினும் பேரிடர் எதுவும் எற்படாமல் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
தவிர்க்கப்பட்ட பேரிடர்
புதன்கிழமை காலை டேம்பா நகரில் இருந்து பீனிக்ஸ் நகரத்திற்கு சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் (Flight 590) புறப்படுவதற்காக பயணித்து கொண்டிருந்த போது தரையிறங்கும் கியரில் கோளாறு ஏற்பட்டது.
அதாவது, வலது பின்புற சக்கரம் வெடித்ததே விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
JUST IN: American Airlines flight 590 out of Tampa, Florida narrowly avoids disaster after multiple tires blow out during takeoff.
— Collin Rugg (@CollinRugg) July 10, 2024
As the plane was picking up speed and seconds away from liftoff, the tires blew out.
The pilot slammed on the brakes as the plane barreled towards… pic.twitter.com/P5kZ3N6pUO
மேலும் தவிர்க்கப்பட்ட இந்த விமான பேரிடர் விபத்தில் இருந்து பயணிகள் அனைவரைவும் காயங்கள் இன்றி பத்திரமாக உயிர் தப்பினர்.
வெளியான பரபரப்பு வீடியோ
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ காட்சியில், டயர் பிரச்சனைக்குப் பிறகு விமானம் ஓடுதளத்தின் முடிவில் பாதுகாப்பாக நின்றது காணப்படுகிறது. மேலும் அவசர கால ஊர்திகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
பாதிக்கப்பட்ட டயரில் இருந்து புகை கிளம்புவதுடன் விமானம் டாக்ஸி செல்வது போன்ற பரபரப்பான தருணங்களை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. டயர் துண்டுகள் ஓடுதளத்தில் சிதறும்போது தீப்பொறி தெறிப்பதும் தெரிகிறது.
மாற்று விமானத்தில் பயணம்
மொத்தம் 174 பயணிகள் மற்றும் 6 குழு உறுப்பினர்கள் விமானத்திலிருந்து இறங்கி முனையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அவர்கள் பீனிக்ஸ் செல்லும் பயணத்தை தொடர்வதற்காக மாற்று விமானத்தை ஏற்பாடு செய்தது.
இந்த சம்பவத்தின் போது டம்பா சர்வதேச விமான நிலைய இயக்கம் வழக்கம் போல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |