அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சேவை முடங்கியது: நாடு முழுவதும் பயணிகள் கடும் அவதி!
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸில் தொழில்நுட்ப கோளாறு
அமெரிக்காவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன்ஸ், நாடு முழுவதும் உள்ள அனைத்து விமானங்களையும் இன்று திடீரென ரத்து செய்துள்ளது.
தொழில்நுட்பப் பிரச்சினையால் இந்த எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
A real American Christmas nightmare: All American Airlines flights canceled in the US
— NEXTA (@nexta_tv) December 24, 2024
Flights were suspended due to technical issues, leaving passengers to deal with delays.
American Airlines is the largest airline in the US, transporting over half a million passengers daily.… pic.twitter.com/VVAAQWxQah
இந்த திடீர் விமான ரத்து காரணமாக அமெரிக்கா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக, கிறிஸ்துமஸ் கால பயணம் களைகட்டிய இந்த நேரத்தில் திடீர் விமான சேவை நிறுத்தம் பயணிகளுக்கு பெரும் தாமதம் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
கதவுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்
பல பயணிகள் சமூக ஊடக தளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பல விமானங்கள் நீண்ட நேரம் விமான நிலைய வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் கதவுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எக்ஸ்(X) தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்த திடீர் நிறுத்தத்தை விமான நிறுவனம் ஒப்புக் கொண்டது. "பிரச்சினையை விரைவாக தீர்க்க தீவிரமாக முயற்சித்து வருகிறோம். இதற்கான தீர்வுக்கான கால அளவு குறித்து இன்னும் தெரியவில்லை" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் 350 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆயிரக்கணக்கான விமானங்களை தினமும் இயக்குகிறது.
சில வாரங்களுக்கு முன்பு, விமான நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி டேவிட் சீமோர்(David Seymour), விடுமுறை கால ஓட்டத்தை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சிறப்பாக கையாள தயாராக உள்ளது என்றும், பயணிகள் எந்த இடையூறும் இல்லாமல் பயணிக்க வழிவகை செய்யப்படும் என்றும் பொது வெளியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |